» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கழிவுநீர் கால்வாயில் குப்பைகளை கொட்டக்கூடாது : தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்

வியாழன் 21, நவம்பர் 2024 3:15:38 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கழிவுநீர் செல்லும் கால்வாயில்களில் பொது மக்கள் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்கும் படி மாநகராட்சி ஆணையாளர்  லி.மதுபாலன், கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மாநகராட்சியின் மூலம் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பு நடவடிக்கைகள் காரணமாக மாநகரின் பல்வேறு மழைநீர் வெளியேறும் கால்வாய்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைநீர் எவ்வித தடையும் இன்றி வெளியேறி வருகிறது. மழைநீரை வெளியேற்ற 45 மழைநீர் உந்து நிலையங்கள் மற்றும் 19 பாதாள சாக்கடை கழிவுநீர் உந்து நிலையங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதற்கென 24 மணி நேரமும் சிறப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு மின் மோட்டார்கள் இயக்கப்படுகிறது.

இதன் பலனாக இயல்வு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மாநகரின் செயல்பாடு நடைபெறுகிறது. மேலும் நகரின் பள்ளமான பகுதிகளான லூர்தம்மாள் புரம் . ராஜீவ் நகர், P& T காலனி ஆகிய பகுதிகளில் மின் மோட்டார்கள் மற்றும் கழிவுநீர் வாகனங்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்படுகிறது. இப்பணி  மேயர் மற்றும் ஆணையாளர் அவர்களால் கள ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நோய் தடுப்பு நடவடிக்கைகளும், கொசு ஒழிப்பு பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. மேலும் பொது மக்கள் கழிவுநீர் செல்லும் கால்வாயில்களில் குப்பைகளை கொட்டாமல் ஒத்துழைக்கும் படி மாநகராட்சி ஆணையாளர்  லி.மதுபாலன்,  கேட்டுக் கொண்டுள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital

New Shape Tailors





Thoothukudi Business Directory