» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குரும்பூர் - நாசரேத் சாலை பணி முற்றிலும் முடக்கம் : நெடுஞ்சாலை துறை அலட்சியம்!
செவ்வாய் 19, நவம்பர் 2024 9:21:22 PM (IST)
குரும்பூர் - நாசரேத் சாலை பணிகள் நெடுஞ்சாலை துறையின் அலட்சியப் போக்கால் முடங்கியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் நாசரேத் சாலையில் நெய்விளையில் சாலையில் திடீரென எந்த முன்னறிவிப்பும் இன்றி பாலம் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். மாற்று வழி ஏற்படுத்தாமல் எந்த தகவலும் பொது மக்களுக்கு தெரிவிக்காமல் வேலையை ஆரம்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
மேலும் இது கிறிஸ்தவர்களின் பண்டிகை காலம் என்பதால் அதிக பேர் நாசரேத்தில் கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள். அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிகம் கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள் இவர்கள் பண்டிகை காலங்களில் துணி மற்றும் நகைகள் எடுப்பதற்கு வெளியூர் சென்று வருவதற்கும் வெளியூரில் உள்ளவர்கள் இங்கே வருவதற்கும் வசதி இல்லாத நிலை ஏற்படுத்தியுள்ளனர்.
சர்வீஸ் சாலை அமைக்காமல் இவர்கள் எந்த அடிப்படையில் எந்த முகாந்திரத்தில் இந்த வேலை தொடங்கி உள்ளார்கள். பொது மக்களின் நிலையை பற்றி சிறிது கூட கவலை படாத நெடுஞ்சாலைத்துறையை வன்மையாக கண்டிக்கிறோம் மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கூறியுள்ளனர்.