» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க இந்து முன்னணி கோரிக்கை
செவ்வாய் 19, நவம்பர் 2024 5:25:31 PM (IST)
தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் அருகே சாலையை சீரமைக்க வேண்டும் எனற இந்து முன்னணி மாவட்ட செயலாளர் கே.எஸ்.ராகவேந்திரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு பின்புறம் இயங்கி வரும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வரும் சாலை குண்டு குழியுமாக இருக்கிறது. இதனால் மாற்று திறனாளிகள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.