» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் : ஆட்சியர் தகவல்
செவ்வாய் 19, நவம்பர் 2024 3:30:24 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து பயனைடையுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், " மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ/மாணவியர்கள் 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh & Renewal Applications) விண்ணப்பிப்பதற்கான படிவங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களில்; ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டபடிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்புக் கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்தப்பட்ட தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நடப்பு கல்வியாண்டில் (2024-25) புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh & Renewal applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவ/மாணவியர்கள் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.
மேற்படி கல்வி உதவித்தொகை புதியது (Fresh ) மற்றும் புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பத்தினை மாணவ/மாணவியர்கள் பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்கள் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம்,, எழிலகம் இணைப்புக்கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, தொலைபேசி எண்: 004-29515942, மின்னஞ்சல் முகவரி - [email protected] என்ற முகவரிக்கு புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பப்படிவங்களை 15.12.2024க்குள்ளும், புதியது (Fresh) 15.01.2025க்குள்ளும் அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேற்படி கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியுள்ள பிவ/மிபிவ/சீம மாணவ/மாணவியர்கள் விண்ணப்பித்து பயனைடையுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.