» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் தேசிய இயற்கை மருத்துவ தின விழா
செவ்வாய் 19, நவம்பர் 2024 3:13:46 PM (IST)
கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய இயற்கை மருத்துவ தின விழாவில் இயற்கை மருத்துவத்தின் கோட்பாடுகள் சிகிச்சை முறைகள் குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம்,உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை மாற்றுவதன் மூலம் வாழ்க்கை முறை நோய்களை தடுப்பதற்கும் சிகிச்சை அளிப்பதற்கும் மருந்து இல்லா மருத்துவ முறையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நவ.18ம் தேதியை இயற்கை மருத்துவ தினமாக அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் சொர்ணா நர்சிங் கல்லூரியில் நடந்த தேசிய இயற்கை தின விழாவில் இயற்கை மருத்துவத்தின் கோட்பாடுகள் சிகிச்சை முறைகள்,வளர் இளம் பெண்களுக்கும், தாய்மையுற்ற பெண்களுக்கும் இயற்கை மருத்துவத்தின் பலன்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.விழாவிற்கு சொர்ணா நர்சிங் கல்லூரி முதல்வர் சாந்தி பிரியா தலைமை வகித்தார்.
இதில் கோவில்பட்டி தலைமை மாவட்ட அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் திருமுருகன்,ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை இயற்கை மருத்துவர் இந்துமதி ஆகியோர் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர். இதில் ஏராளமான நர்சிங் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.