» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
இந்திரா காந்தி பிறந்த நாள்: காங்கிரஸ் கட்சியினர் மரியாதை!!
செவ்வாய் 19, நவம்பர் 2024 11:41:23 AM (IST)
தூத்துக்குடியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி பீச் ரோட்டில் அமைந்துள்ள அவரது முழு உருவச் சிலைக்கு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் காங்கிரஸ் கட்சி மாநில பொது குழு உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு மாநில ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கே.பெருமாள்சாமி ஏற்பாட்டின் பேரில் அகில இந்திய காங்கிரஸ் ஒர்க்கர்ஸ் கமிட்டி மாவட்ட தலைவர் ஜெயக்கொடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் வர்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்ட தலைவர் டேவிட் பிரபாகரன், வடக்கு மண்டல தலைவர் சேகர், கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, பழங்குடியினர் பிரிவு மாநில செயலாளர் முனியசாமி, வர்த்தக காங்கிரஸ் மாநகர தலைவர் அருள் வளன், மாநகரச் செயலாளர் கோபால், மாநகர பொது செயலாளர் இக்னேசியஸ், மீனவர் அணி மிக்கேல் குரூஸ், எஸ்சி/எஸ்டி பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாராம், ஊடகப்பிரிவு சுந்தர்ராஜ், நேரு, பிரபு, ரதன், சுரேஷ்குமார், பிரைன்நாத், மகேந்திரன்,வாசி ராஜன், சேவியர்மிஷ்யர் ,ஜெபமாலை, செல்வம், ஜோக்கின், அய்யாதுரை, ஐஎன்டியூசி முத்து, ரமேஷ்,சாரதி, கிரிதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.