» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

குப்பையில்லா தூத்துக்குடி மாநகராட்சி: பொதுமக்கள் கருத்துக்கள் அனுப்பலாம்

திங்கள் 18, நவம்பர் 2024 9:11:35 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி குப்பையில்லா நகரம் தரச்சான்று பெறுவது தொடர்பாக பொதுமக்கள் கருத்துக்கள் அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைப்படியும், தூத்துக்குடி மாநகராட்சி எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கழிவுநீர் வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து உரிமம் பெறப்பட்டுள்ளது. மேலும், அதனை செயல்படுத்தும் வகையில் 14420 கட்டணமில்லா தொலைபேசி எண் கழிவுநீர் மேலாண்மை குழு (மாவட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் அளவில்) அமைக்கப்பட்டு 100 சதவிகிதம் திறந்த வெளியில் மலம் கழித்தல் (Open Defecation Free ++) சிறுநீர் கழித்தல் இல்லாத மாநகராட்சியாகவும் மற்றும் பாதுகாப்பான முறையில் கசடுகழிவு மேலாண்மை பணிகள் செயல்பட்டு வருகிறது.

வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் (MOHUA) கீழ் தூய்மை இந்தியா திட்டம் (நகரம்) 2.0 திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் செயல்பாடுகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு குப்பை இல்லாத நகரம் (Garbage Free City ) தொடர்பான தரச்சான்று (Garbage Free City – 1 star / 3 Star / 5 Star / 7 Star) வழங்கப்படுகிறது அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாநகராட்சியில் சேகரமாகும் திட மற்றும் திரவக்கழிவுகளை உரிய திட மற்றும் திரவக்கழிவுகள் மேலாண்மை விதிகளின்படி முறையே தரம் பிரித்து சேகரிக்கப்பட்டு மற்றும் கழிவு செயலாக்க மையங்களின்மூலம் உரிய அறிவியல் ரீதியான முறையில் செயலாக்கம் செய்யப்படுகிறது. 

எனவே, தூத்துக்குடி மாநகராட்சியினை குப்பையில்லா நகரம் (Garbage Free City) தொடர்பான தரச்சான்று பெறுவது தொடர்பாக. இம்மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள், ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்கள் இருப்பின் ஆணையாளர் தூத்துக்குடி மாநகராட்சி அவர்களுக்கு எழுத்து வாயிலாக அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 தினங்களுக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து

க. இளங்கோNov 20, 2024 - 11:56:12 PM | Posted IP 172.7*****

குப்பைகளை சரியான முறையில் பிரித்து கொடுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவித்தால் சிறப்பாக இருக்கும். அவர்கள் மற்றவர்களிடமும் சொல்வார்கள்.

MuthukumarNov 20, 2024 - 03:30:01 PM | Posted IP 162.1*****

வடக்கு மண்டலம் செயல்பாடு சரியாக இல்லை. சில தகவல்களுக்கு மண்டலத்தில் உள்ளவர்கள் சரியாக பதில் கூற கூறவில்லை

naan thaanNov 20, 2024 - 01:55:59 PM | Posted IP 172.7*****

குப்பை என்று பொதுவாக சொல்லி விட முடியாது , மட்கும் அனைத்தும் அங்கேயே உரமாக மாறுகிறது , பிளாஸ்டிக் பொருட்கள் , கண்ணாடி பாட்டில்கள் , உலோக , தகர பொருட்கள் எல்லாம் வருமானம் தான் , அதை விற்பனை செய்யவும் மறுசுழற்சி செய்யவும் முடியும் .... பிரச்சனை பாலித்தீன் carrybag , நெகிழி தாள்கள் , பிளாஸ்டிக் டம்ளர்கள் போல சில ,,, இவற்றை முழுமையாக தடை செய்தால் சாக்கடையில் அடைப்புகள் ஏற்படாது, 1 அல்லது 2 மாதத்தில் தூத்துக்குடியில் மண்வளத்தில் பெரும் மாற்றம் வரும்.. 6 மாதத்தில் சுற்று சூழலில் மாற்றம் தெரியும் , சுகாதாரம் , மக்கள் ஆரோக்கியம் மேம்படும் , "அதிகாரம் இருப்பதால் செய்யலாம் , ஆனா செய்ய மாட்டோம்"

P. கண்ணன்Nov 20, 2024 - 12:35:42 PM | Posted IP 172.7*****

முதலில் தூத்துக்குடி மக்களுக்கான பணியை செய்தாலே போதுமானது தூத்துக்குடி 1&2ரயில்வே கேட்டில் போக்குவரத்துக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் 2025 தேர்தலை கருத்தில் கொண்டு மக்களுக்கான பணியை செய்தாலே மாநகரச்சிக்கான தகுதி பெறும் வியாபாரிகளை மட்டுமே கருத்தில் கொள்ளமல் மக்களை சற்று சிந்தித்து பார்ப்பது நன்று

AlwarappanNov 19, 2024 - 10:21:37 PM | Posted IP 162.1*****

Kuuppaiku good bye sollluvom

AlwarappanNov 19, 2024 - 10:20:26 PM | Posted IP 162.1*****

Always to clllecct ruppish.24 houurs only First eight hours duty ruppishh collector femal second eight hours ruppish worker mmale Third eight hours. All department retired staff to must use to modify plan unemployment pproblem over new gradducattes to join latest up. Date of modify plan Goopaiku. Goood bye solliralam Kuuppaiell than kuperann irrupaar. To use nnew work mmodernization mmodern fertilizers.use new ittem missingg ggold etc Kuuppainnu. Ninikaattheenghha adhiilldhhaan varuumaanMum itruk Didailly collect daily to eearn income To. Sstop ttotal. Economii systdm failiur oorea narippoiveddumit is a twentyfour houurs routine wwork Now thhe time latest midnigghtt kuuppai golld coins jewelliaries no. Oflakhhes rupai to put in the. Kuppai

NagalingamNov 19, 2024 - 09:53:18 PM | Posted IP 172.7*****

Pollution increase for harbour area

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital


New Shape Tailors






Thoothukudi Business Directory