» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் உறுப்பினர் பணி : விண்ணப்பங்கள் வரவேற்பு!
திங்கள் 18, நவம்பர் 2024 5:18:59 PM (IST)
தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள சமூகப்பணி உறுப்பினர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "2015ம் ஆண்டின் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் மற்றும் விதிமுறைகளின்படி அமைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி இளைஞர் நீதிக்குழுத்தில் காலியாக உள்ள் 1 சமூகப்பணி உறுப்பினர் நியமிக்கப்படுவதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைக் கொண்ட தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளைஞர் நீதிக்குழுமத்திற்கு 1 சமூகப்பணி உறுப்பினர் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளது. மேலும் இப்பணி அரசு பணியல்ல.
விண்ணப்பதாரர்கள் குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும் அல்லது குழந்தை உளவியல் அல்லது மன நலம் மருத்துவம், சமூகவியல் அல்லது சட்டம் ஆகியவற்றில் ஏதேனும் பட்டம் பெற்று தொழில் புரிபவராக இருத்தல் வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு குறையாதவராகவும், 65 வயதைப் பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.
இதற்கான விண்ணப்படிவத்தை தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையத்தள முகவரியிருந்தும் (http://dsdcpimms.tn.gov.in) மற்றும் தூத்துக்குடி மாவட்ட இணையதளத்திலும் (www.thoothukudi.nic.in) விண்ணப்பதாரர் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகுதி வாய்ந்த நபர்கள் சமூகப்பணி உறுப்பினர் பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் உரிய விவரங்களை பூர்த்தி செய்து வருகின்ற 03.12.2024 க்குள் இயக்குநர், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்: 300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600 010 என்ற முகவரியில் கிடைக்கப்பெறுமாறு விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அலுவலகத்திற்கு வந்து சேரவேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.