» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வ.உ.சி., நினைவு தினம்: தமிழக வெற்றி கழகம் மரியாதை!
திங்கள் 18, நவம்பர் 2024 3:12:33 PM (IST)
தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 88வது குரு பூஜையை முன்னிட்டு தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
m.sundaramNov 18, 2024 - 07:45:25 PM | Posted IP 162.1*****