» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெண் தற்கொலை: போலீசார் விசாரணை!
திங்கள் 18, நவம்பர் 2024 11:58:49 AM (IST)
குரும்பூர் அருகே பெண் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள வீரமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்த பெருமாள் மனைவி வன ராதா (37). இவர் தனது வீட்டில் திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த குரும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லா பாய் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்தார்? என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.