» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருமண விழாவில் பங்கேற்க வந்தவரை கைது செய்த போலீசார்: உறவினர்கள் சாலைமறியல்

திங்கள் 18, நவம்பர் 2024 8:30:35 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் அருகே ஜாமீன் நிபந்தனையை மீறியதால் திருமண விழாவில் பங்கேற்க வந்தவரை போலீசார் கைது செய்தனர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து என்ற பாயாசம் (49). இவர் மீது முறப்பநாடு காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் சென்னை ஐகோர்ட்டில் தினமும் கையெழுத்திட்டு வந்தார்.

கடந்த சில நாட்களாக பேச்சிமுத்து ஐகோர்ட்டில் கையெழுத்திடாததால், அவருக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். எனவே பேச்சிமுத்துவை போலீசார் தேடி வந்தனர். நேற்று ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் நடந்த உறவினரின் திருமண விழாவில் பங்கேற்பதற்காக பேச்சிமுத்து வந்தார். அப்போது ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சிமுத்துவை கைது செய்ய சென்றனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள் நெல்லை-திருச்செந்தூர் மெயின் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து பேச்சிமுத்துவை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory