» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டிசம்பர் 6 போராட்டம்: தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனை

திங்கள் 18, நவம்பர் 2024 8:15:56 AM (IST)



செய்துங்கநல்லூரில் டிசம்பர் 6 போராட்டத்தை முன்னிட்டு தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

டிசம்பர் 6 போராட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாக சிறப்பு கூட்டம் செய்துங்கநல்லூரில் மாவட்ட தலைவர் அகமது இக்பால் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத் தலைவர் ஹமீது கலந்து கொண்டார். 

டிசம்பர் 6 ஆர்ப்பாட்டத்தில் பெருமக்கள் திரளை கூட்டுவது, பள்ளிவாசல் எங்கும் ஜும்மா நாளில் துண்டறிக்கை கொடுப்பது, தெருமுனை பரப்புரை கூட்டங்கள் நடத்துவது, டிசம்பர் 6 போராட்டத்தை முன்னிட்டு நினைவூட்டும் முகமாக பள்ளிவாசல் தோறும் பிளக்ஸ் போர்டு வைப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தமுமுக மாவட்ட செயலாளர் யூசுப், மமக மாவட்ட செயலாளர் அஸ்மத், மாவட்ட பொருளாளர் ஐதுரூஸ், மாநில செயற்குழு உறுப்பினர் மோத்தி முஸ்ஸம்மில்,  மாவட்ட துணை தலைவர் ஜனோபர் அலி,  மாவட்ட மமக துணை செயலாளர் சுலைமான்,  மமக மாவட்ட துணை செயலாளர் செண்பகராஜ்,  தமுமுக மாவட்ட துணை செயலாளர் ஆசிக் அணிகள் மாவட்ட செயலாளர்கள் சம்சுதீன்(மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பேரவை), பிரவீன்(மீனவர் அணி), தாரிக்(தொண்டரணி) உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


Arputham Hospital






Thoothukudi Business Directory