» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கப்பல் படையில் சேர்வதற்கு இலவச பயிற்சி: மீனவ இளைஞர்களுக்கு அழைப்பு!

வியாழன் 7, நவம்பர் 2024 12:30:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட மீனவர் கிராமங்களை சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு, இந்திய கடலோர காவல் படை, இந்திய கப்பல் படையில் சேர இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் காவல் கூடுதல் இயக்குனர் சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மீனவர்களின் வாரிசுகள் வாழ்வு மேம்பட இந்திய கப்பல்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையில் (நவிக்) சேர்வதற்கு இலவச வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற உள்ளது. 

இப்பயிற்சி மீனவ இளைஞர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறது. இது போல் ஏற்கனவே மூன்று பயிற்சி வகுப்புகள் நடைபெற்று முடிக்கப்பட்டு மீனவ இளைஞர்கள் பயன்பெற்றுள்ளார்கள். இப்பயிற்சி கடலூர், இராமநாதபுரம், மற்றும் கன்னியகுமாரி ஆகிய மாவட்டங்களில் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சார்பாக மூன்று மாதங்கள் நடைபெறும். 

இப்பயிற்சியில் சேர்வதற்கு தகுதியான மீனவ இளைஞர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. பயிற்சியின் போது தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சிகால ஊக்கதொகை வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கான படிவங்கள் கடல் காவல் நிலையங்கள், மீனவர்கள் சங்கங்கள், கடலோர பாதுகாப்பு குழுமம் ஆய்வாளர் அலுவலகம், ரேசன் கடைகள் ஆகிய இடங்களில் கிடைக்கும்.

கல்வி தகுதி /வயது வரம்பு: இப்பயிற்சியில் 18 வயது முதல் 22 வயது வரையும் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு அரசின் விதிபடி வயதுவரம்பு பரம்பு தளர்வு அளிக்கப்படும். மேலும் விண்ணப்பம் செய்ய தகுதியானவர்கள் 12-ஆம் வகுப்பில் கணிதம், இயல்பியல் பாடபிரிவில் 50% மேல் மதிபெண் பெற்றிருக்கவேண்டும்.

உடற்கூறு உயரம் குறைந்த அளவு 157 செமீ இருத்தல் வேண்டும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினருக்கு குறைந்த பட்ச அளவில் மத்திய அரசின் ஆணைப்படி தளர்வு அளிக்கப்படும். மார்பளவு அனைத்து வகுப்பினருக்கும் சாதராண நிலையில் 81 செ.மீ விரிவடையும் நிலையில் 86 செ.மீ இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 15.11.2024 ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory