» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குமரியில் வக்கீல் நந்தினி கணவருடன் கைது!
வியாழன் 7, நவம்பர் 2024 11:38:54 AM (IST)
மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த கோரி நடைபயணம் செல்ல முயன்ற வழக்கறிஞர் நந்தினி மற்றும் அவரது கணவரை கன்னியாகுமரியில் போலீசார் கைது செய்தனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் மோசடி நடப்பதாகவும், மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வலியுறுத்தியும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் நந்தினி, தனது கணவருடன் கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், கன்னியாகுமரியில் இருந்து நடைபயணம் செல்ல வருகை நந்தினி மற்றும் அவரது கணவர் குணா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.