» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊதிய உயர்வு கோரி கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்த சிகால் ஊழியர்கள்!
வியாழன் 7, நவம்பர் 2024 9:19:06 AM (IST)
தூத்துக்குடி துறைமுகத்தில் ஊதிய உயர்வு கோரி சிகால் பன்னாட்டு பெட்டக நிறுவன பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்து பணிக்கு வந்துள்னர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் கண்டெய்னர் டெர்மினல் நிர்வாகம் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பல சலுகைகளை படிப்படியாக நிறுத்தியது. தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு மற்ற பணப்பலன்கள் ஏதும் வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.
இதனைக் கண்டித்து தொழிலாளர்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு ரிப்பணை கையில் கட்டிக் கொண்டும் இன்று பணிக்கு வந்துள்ளனர். உடனடியாக நிர்வாகம் தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.