» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக பாக முகவர்கள் கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!
புதன் 6, நவம்பர் 2024 5:30:04 PM (IST)
தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் சட்டமன்றத் தொகுதி வாரியாக பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ளதாக மாவட்டச் செயலாளர், அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அறிவுறுத்தலின் படி தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட பாக முகவர்கள் (BLA-2) ஆலோசனைக் கூட்டங்கள் கீழ்க்கண்ட விபரம்படி நடைபெறும். இக்கூட்டங்களில் அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட மாநில, மாவட்டக் கழகநிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், பகுதி, உட்பட்ட மற்றும் கிளைக் கழக செயலாளர்கள், பாகமுகவர்கள் (BLA-2) அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டங்கள் நடைபெறும் தொகுதி, நாள், இடம் வருமாறு :
தூத்துக்குடி: 08.11.2024 வெள்ளிக்கிழமை மாலை 06.00மணி (கலைஞர் அரங்கம்) தேர்தல் பார்வையாளர் இன்பா ரகு (மாநில இளைஞரணி துணை செயலாளர்)
விளாத்திகுளம் : 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி G.V.மாஹால் விளாத்திகுளம் தேர்தல் பார்வையாளர் பெருமாள் (மாநில நெசவாளர்அணி அமைப்பாளர்)
கோவில்பட்டி : 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00மணி சத்தியபாமா திருமண மண்டபம். தேர்தல் பார்வையாளர் கணேசன் (மாநில விவசாய அணி துணை அமைப்பாளர்)
இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர், கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா தொடர் நிகழ்ச்சிகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி குறித்தும், 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு புதிய பூத்கமிட்டி நிர்வாகிகள் நியமிப்பது குறித்தும், கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
M.ArunaNov 6, 2024 - 09:33:56 PM | Posted IP 172.7*****