» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆபாசம், இரட்டை அர்த்தம்: பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!
செவ்வாய் 5, நவம்பர் 2024 3:46:13 PM (IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியை தடை செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் மக்கள் முகம் சுவைக்கும் வகையில் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தம் தரக்கூடிய வார்த்தைகளும் இடம் பெறுவதால் அந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும், தொலைக்காட்சிகளில் ஆபாசமான சொற்களைப் பயன்படுத்தும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும். பெரிய திரைக்கு உள்ளது போன்று சின்ன திரைக்கும் தணிக்கை (Censor) முறையினை அமல்படுத்த வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கூட்டமைப்பின் தலைவர் தமிழரசன் தலைமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செயலாளர் வழக்கறிஞர் பெஞ்சமின் பிராங்க்ளின், பொருளாளர் சுபேதார் கருப்பசாமி, இந்திய கலாச்சார நட்புறவு கழக நிர்வாகிகள் அபிராமி முருகன், வழக்கறிஞர்கள் ஜெய் ஸ்ரீ கிறிஸ்டோபர், முத்துக்குமார், நல்லையா, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் ரவிக்குமார், மகாராஜன், மனிதநேய மக்கள் கட்சி செண்பகராஜ், பகத்சிங் ரத்ததான கழக நிர்வாகிகள் மா. காளிதாஸ், குருஜி, லட்சுமணன், வேல்முருகன், மக்கள் நலம் அறக்கட்டளை மாரிமுத்து குமார், ஜெகன், தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு மேரி ஷீலா, விடுதலை சிறுத்தைகள் கட்சி பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். மேலும் தங்களது கோரிக்கை மனுவினை கோட்டாட்சியர் மகாலட்சுமியிடம் வழங்கினர்.