» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விதிமுறைகளை மீறி டன் கணக்கில் சிப்பி விற்பனை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
திங்கள் 4, நவம்பர் 2024 5:09:39 PM (IST)
குலசேகரப்பட்டினம் கடற்கரை பகுதியில் விதிமுறைகளை மீறி டன் கணக்கில் சிப்பிகளை எடுத்து விற்பனை செய்வதை தடை செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதி பாதுகாக்கப்பட்ட மன்னார் வளைகுடா கடற் பகுதியாகும். இங்கு பவளப்பாறைகள் அதிக அளவு காணப்படுவதால் பல்வேறு கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க பகுதியாக உள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதிகளில் விதிமுறைகளை மீறி கடலின் ஆழ பகுதிகளுக்கு விசைப்படகளில் சென்று டன் கணக்கில் கடல் சிப்பிகளை முறைகேடாக அள்ளி விற்பனை செய்து ஒரு கும்பல் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது. ஆளுங்கட்சி துணையுடன் இந்த விற்பனை நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், உடனடியாக மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மக்கள்Nov 4, 2024 - 06:43:23 PM | Posted IP 172.7*****