» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:40:35 AM (IST)



"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், கயத்தார் ஊராட்சி  ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியர்  க.இளம்பகவத் ஆய்வு செய்தார். 

மக்களை நாடி அவர்களின் குறைகளைத் தீர்க்க தமிழ்நாடு அரசின் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின்கீழ், இன்று (24.10.2024) தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஊராட்சி  ஒன்றியம் கே.குப்பனாபுரம் கிராமத்தில் உள்ள  ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர்,  காலை உணவு திட்ட ஊழியர்களிடம் உணவுகள் சரியான முறையில் வருகிறதா, உணவுகள் தரம் குறித்து ஆய்வு செய்து சரியான முறையில் மாணவ மாணவியர்களுக்கு பரிமாறப்படுகிறதா என கேட்டறிந்து, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். திட்ட இயக்குநர் (த.மா.ஊ.வா.இ) மல்லிகா, கயத்தார் வட்டாட்சியர் சுந்தரராகவன், கயத்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

முன்னதாக சன்னதுபுதுக்குடியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்தல், நுகர்வோர்களிடமிருந்து வரக்கூடிய புகார்களுக்கு  உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல், புதிய மின் இணைப்புகள் விரைந்து வழங்குதல் போன்ற பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். 

கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர், திடீர் ஆய்வு மேற்கொண்டு, வருகைப் பதிவேடு, புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருந்து பொருட்களின் இருப்பு குறித்து மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

குடும்ப பிரச்சனையில் வாலிபர் தற்கொலை!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:14:58 AM (IST)

பைக் மீது லாரி மோதி விபத்து: வாலிபர் பலி!

வியாழன் 24, அக்டோபர் 2024 11:11:32 AM (IST)

Sponsored Ads

Arputham Hospital




New Shape Tailors





Thoothukudi Business Directory