» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்து பயன்பெற விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!

புதன் 16, அக்டோபர் 2024 5:52:39 PM (IST)

புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கு ராபி பருவ பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன் பெற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.

இயற்கை சீற்றங்களினால் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், விவசாயிகளின் வருமானத்தை நிலைப்படுத்தவும், தமிழக முதலமைச்சர்அவர்களின் உத்தரவின்படி 2024-25-ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரி திருந்திய பயிர்காப்பீட்டுத் திட்டத்தினை செயல்படுத்திடும் பொருட்டு அதற்கான இணைய பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

நடப்பாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தார், விளாத்திகுளம், புதூர், ஒட்டப்பிடாரம், கருங்குளம், தூத்துக்குடி, ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம், சாத்தான்குளம், திருச்செந்தூர் மற்றும் உடன்குடி வட்டாரங்களில் உள்ள 222 குறு வட்டாரங்களில் கம்பு, சோளம், உளுந்து, பாசிப்பயறு, நிலக்கடலை, எள், சூரியகாந்தி, நெல் மற்றும் பருத்தி பயிர்கள் பயிர்காப்பீடு செய்ய அரசினால் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 

மக்காச்சோளப் பயிருக்கு கருங்குளம், கயத்தார், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம், புதூர், திருவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி ஆகிய வட்டாரங்களில் பயிர் காப்பீடு செய்ய 255 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறாக பயிர் காப்பீடு செய்ய உளுந்து மற்றும் பாசிப்பயறுக்கு பயிருக்கு 15.11.2024-க்குள்ளும், மக்காச்சோளம் மற்றும் பருத்திக்கு 30.11.2024-க்குள்ளும், சோளம், நிலக்கடலை பயிர்களுக்கு 16.12.2024-க்குள்ளும், கம்பு, சூரியகாந்தி, எள் பயிர்களை 30.12.2024-க்குள்ளும், நெல்-ஐஐஐ பயிரினை 31.01.2025-க்குள்ளும், கொத்தமல்லிக்கு 17.01.2025-க்குள்ளும், வெங்காயத்திற்கு-31.01.2025, சிவப்பு மிளகாய்க்கு 31.01.2025-க்குள்ளும், வெண்டைக்கு 15.02.2025 மற்றும் வாழைக்கு 28.02.2025-க்குள்ளும் இணையத்தில் பதிவு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இக்குறிப்பிட்ட தேதிக்குள் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தங்கள் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் பொது சேவை மையங்கள் (CSC) மூலமாகவோ, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

நடப்பாண்டில் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.534/-, மக்காச்சோளப் பயிருக்கு ரூ.258/-, சோளப்பயிருக்கு ரூ.137/-, கம்பு பயிருக்கு ரூ.128/-, உளுந்துக்கு-231/-, மற்றும் பாசிப்பயறுக்கு ரூ.217/-, நிலக்கடலை பயிருக்கு ரூ.285/-, எள் பயிருக்கு ரூ.122/-, சூரியகாந்தி பயிருக்கு ரூ.156/-, பருத்தி பயிருக்கு ரூ.402/-, கொத்தமல்லிக்கு ரூ.416/-, வெங்காயத்திற்கு ரூ.1085/-, சிவப்பு மிளகாய்க்கு-ரூ.910/- வெண்டைக்கு-ரூ.870/-, வாழைக்கு-ரூ.3470/- பயிர் காப்பீடு கட்டணமாக அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது பூர்த்தி செய்து கையொப்பமிட்ட முன்மொழிவு விண்ணப்பத்துடன், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், ஆதார் எண் இணைக்கப்பட்ட நமலஉ பூர்த்திசெய்யப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பதிவு செய்யும் பரப்பிற்கான கட்டணத்தொகையை செலுத்த வேண்டும்.

பதிவு செய்தபின் பெறப்படும் இரசீதில் அடங்கலில் உள்ள பயிர், சாகுபடி செய்யும் பரப்பு, கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண், வங்கி கணக்கு எண் ஆகிய விபரங்களை ஒப்புகை சீட்டில் சரிபார்த்து கொள்ள வேண்டும். காப்பீடு ஆவணங்கள் மற்றும் இரசீதை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். விவசாயிகள் அனைவரும் காப்பீடு செய்வதற்கான இறுதி நாள் வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பயிர்காப்பீடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும, உளுந்து மற்றும் பாசிப்பயிறுக்கு 15.11.2024 கடைசி நாளாக இருப்பதால் விவசாயிகள் விரைந்து பயிர்காப்பீடு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory