» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!

புதன் 16, அக்டோபர் 2024 4:04:15 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீரை அகற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமினை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மேலும் தீர்வு காணப்பட்டவர்களுக்கு உடனடியாக அதற்கான ஆணைகளையும் வழங்கினார். 

பின்னர் அவர் பேசுகையில், தூத்துக்குடி மாநகராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்ணீர் அகற்றப்பட்டது. மேலும், தூத்துக்குடி நகரில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் அந்த பகுதி மாமன்ற உறுப்பினர்களிடம் தகவல் கேட்டறிந்து மழைநீரை அகற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மண்டல தலைவர் கலைசெல்வி, மாமன்ற உறுப்பினர்கள் ரெக்ஸ்லின், ஜான்சி ராணி, பேபி ஏஞ்சலின், ராமு அம்மாள், மும்தாஜ், மரிய கீதா, எடின்டா, மகேஸ்வரி, சரண்யா, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital


New Shape Tailors




Thoothukudi Business Directory