» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஹாக்கி இந்தியா லீக்... தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்கு கோவில்பட்டி வீரர்கள் 2பேர் தேர்வு!

புதன் 16, அக்டோபர் 2024 3:47:57 PM (IST)

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில் தமிழ்நாடு டிராகன்ஸ் அணிக்காக கோவில்பட்டியைச் சேர்ந்த 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஹாக்கி இந்தியா லீக் போட்டி இந்தியாவில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வருகிற டிசம்பர் மாதம் நடக்க உள்ளது இப் போட்டியில் 8 ஆண்கள் அணியும் 6 பெண்கள் அணியும் விளையாட உள்ளன இதில் ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு டிராகன்ஸ் என்ற பெயரில் தமிழகம் களம் காண உள்ளது. இந்த போட்டிகளில் விளையாடுவதற்கான வீரர்களை தேர்வு  செய்வதற்கான ஏலம் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. 

தமிழ்நாடு டிராகன் அணிக்காக தமிழக வீரர்கள் 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவில்பட்டி  வீரர்கள் திலீபன் மற்றும் அருண் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். திலீபன் 5 லட்சம் ரூபாய்க்கும்  அருண் 3.6 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர். 

திலீபன்  கூசாலிப்பட்டி  அசோக் நினைவு ஹாக்கி அணி வீரர் ஜூனியர் இந்திய ஹாக்கி அணியின் பயிற்சி  முகாமில்  கலந்து கொண்டு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பாக அகில இந்திய பல்கலைக்கழக அளவிலான போட்டியில் விளையாடி பதக்கம் பெற்றுள்ளார்  கடந்த மாதம் டெல்லியில் உள்ள ஜிஎஸ்டி மத்திய அரசு பணியில் ஹாக்கி விளையாட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்

அருண் என்பவர்  டாக்டர் அம்பேத்கார் ஹாக்கி அணி வீரர். தற்போது  ராமநாதபுரத்தில் உள்ள விளையாட்டு விடுதியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார் கடந்த ஆண்டு சப் ஜூனியர் தேசிய போட்டியில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக சப் ஜூனியர் இந்திய பயிற்சி முகாம் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி முகாமில் இருந்து வருகிறார். தற்போது இரண்டு வீரர்களும் தமிழ்நாடு டிராகன் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள அவர்களுக்கு ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக டிராகன்ஸ் அணி வெற்றிவாகை சூட ஹாக்கி யூனிட் ஆப் தூத்துக்குடி தலைவர் மோகன் அருமை நாயகம், செயலாளர் குரு சித்திர சண்முக பாரதி, பொருளாளர் காளிமுத்து, பாண்டி ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ஈஸ்டர்,தங்கராஜ், மாரியப்பன், பொன்ராஜ், அய்யாதுரை, முன்னாள் இந்திய ஹாக்கி வீரர் அஸ்வின் அசோக் நினைவு ஹாக்கி அணி செயலாளர் பெரியதுரை அம்பேத்கர் ஹாக்கி அணியின் பொறுப்பாளர் மாயாண்டி முன்னாள் தேசிய வீரர் காளிதாஸ், உடற் கல்வி ஆசிரியர்கள் சுரேஷ்குமார், முருகன், கிருஷ்ணமூர்த்தி, சிவானந்த், ஆல்ட்ரின் அதிசயராஜ் , ராஜ மனோகர், மணிகண்டன், மனோஜ் குமார், வேல்முருகன், ஆகியோர் பாராட்டினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory