» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூரில் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது

புதன் 18, செப்டம்பர் 2024 10:51:48 AM (IST)



திருச்செந்தூரில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் சுமார் 50 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கி காணப்பட்டது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. மேலும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் வழக்கமாக கோவில் கடலானது அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் சுமார் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரம் வரை கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று பவுர்ணமி தினம் என்பதால் இன்று வரை திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலானது நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா வைகுண்டர் அவதாரப் பதிவரை சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு சுமார் 50 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்படுகிறது.

இதனால் பாசி படிந்த பாறைகள் வெளியே தெரிகிறது. மேலும் கடல் அலைகளின்றி குளம் போல் காட்சியளித்தது வருகிறது . இதனால் புனித நீராட வந்துள்ள ஏராளமான பக்தர்கள் பாறை மீது ஏறி விளையாடி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக கடல் சீற்றம் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது கடல் அலையே இல்லாமல் குளம் போல் காட்சியளிப்பதை பார்த்து பக்தர்கள் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி!

வியாழன் 19, செப்டம்பர் 2024 11:27:07 AM (IST)

Sponsored Ads





Arputham Hospital





Thoothukudi Business Directory