» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சீதாராம் யெச்சூரி மறைவு : தூத்துக்குடியில் அமைதி பேரணி!

வெள்ளி 13, செப்டம்பர் 2024 8:27:11 PM (IST)



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடியில் அனைத்து கட்சியின் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. 

தூத்துக்குடி ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கி இப்பேரணி பழைய பேருந்து நிலையம் முன்பு நிறைவடைந்தது. அங்கு தொடர்ந்து இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, காங்கிரஸ் கமிட்டி மாநில துணை தலைவர் ஏபிசிவீ.சண்முகம், தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை, இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் கரும்பன், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன், 

விடுதலை சிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் ஆட்டோ கணேசன் உட்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் இரங்கல் உரையாற்றினர். நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநகர செயலாளர் முத்து, மாவட்ட குழு உறுப்பினர் ராஜா, இந்திய கம்யூனிஸ்டு மாநகர செயலாளர் தனலெட்சுமி, திமுக பகுதி செயலாளர்கள் ரவீந்திரன் , ஜெயக்குமார், தூத்துக்குடி ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்கொடி, சரவணகுமார், தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் ரவி பொன்பாண்டி, சிஐடியு செயலாளர் ரசல், 

வடக்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாணவரணி அமைப்பாளர் சீனிவாசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நாகராஜ், தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என்.அண்ணாதுரை, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், மாணவரணி சத்யா, மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், ஜெயசீலி , ரெங்கசாமி, நாகேஸ்வரி, கந்தசாமி, ரெக்ஸிலின் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக, காங்கிரஸ், விசிக, தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியில் மார்க்சிஸ்ட் செயற்குழு உறுப்பினர் அர்ச்சுனன் நிறைவுரையாற்றினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory