» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்

வெள்ளி 13, செப்டம்பர் 2024 3:09:28 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் மேலஅரசரடி உட்பட 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கிராம ஊராட்சிகளில் செப்.9ம் தேதி முதல் 13ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.

மேல அரசரடி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் உலகையா தலைமை வகித்தார். ஊராட்சி செயலர் பழனிமுருகன் அனைவரையும் வரவேற்றார். கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்து முருகன் வழிநடத்தி மக்களுடன் கலந்துரையாடல் செய்தார்.கூட்டத்தில் சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் கிராம வள பயிற்றுநர்கள் மஞ்சுளா, முருகலட்சுமி, முத்து செல்வி, சூர்யா அண்ணலட்சுமி வார்டு உறுப்பினர் மல்லிகா, பணித்தள பொறுப்பாளர்கள் சந்திரா, கோமதி, பாண்டி செல்வி, உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா நன்றி கூறினார். இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் குலசேகரநல்லூர் அக்கநாயக்கன்பட்டி உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory