» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் திமுகவில் ஐக்கியம்

வெள்ளி 13, செப்டம்பர் 2024 10:30:23 AM (IST)



இனாம் மணியாச்சியில் அதிமுகவைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், இனாம் மணியாச்சியில் நடைபெற்ற கோவில்பட்டி மேற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த சத்திரப்பட்டி முன்னாள் கிளைச் செயலாளர் செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் முருகலட்சுமி ஆகியோர் தலைமையில் முருகன், மாரித்தாய், கஸ்தூரி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வின் போது உடன் கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் தி. தாமோதரக்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துமாரி, நிர்மலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்..


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital





Thoothukudi Business Directory