» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியீடு : எஸ்பி ஆல்பர்ட் ஜான் மறுப்பு!

புதன் 11, செப்டம்பர் 2024 4:16:33 PM (IST)

உண்மைக்கு புறம்பாக பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்கு திட்டங்குளம் பகுதியில் உள்ள தண்ணீர் நீர்த்தேக்க தொட்டி மீது நேற்று (10.09.2024) காலை மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஏறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்த தகவல் அறிந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து மேற்படி நபரிடம் வெகு நேரமாக போராடி பத்திரமாக கீழே இறக்கி அவரது தாய் தந்தையரிடம் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் நீர்தேக்க தொட்டி மீது ஏறியவர் வடக்கு திட்டங்குளம் பகுதியைச் சேர்ந்த திருமேனி சரவணன் என்பவரது மகன் ஜோதி ரமேஷ் (25) என்பதும், கடந்த 10 வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. மேலும் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் வடக்கு திட்டங்குளத்திலிருந்து குடிபெயர்ந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர் நகர் பகுதியில் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்தும் தற்போது தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மேற்படி ஜோதி ரமேஷ் மருந்து மாத்திரை உட்கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் சங்கரன்கோவிலிலிருந்து சொந்த ஊரான வடக்கு திட்டங்குளத்திற்கு வந்த அவர் மனநிலை சரியில்லாமல் நேற்று (10.09.2024) காலை நீர்த்தேக்க தொட்டி மீது ஏறி தகராறில் ஈடுபட்டதும் பின்னர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரின் மூலம் பத்திரமாக கீழே இறக்கப்பட்டு அவரது தாய் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை மது, கஞ்சா போதைக்கு அடிமையாகி நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் என்று குறிப்பிட்டு உண்மைக்கு புறம்பான செய்தியை பிரபல செய்தி தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டுள்ளது முற்றிலும் மறுக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற செய்தியின் உண்மைத்தன்மை தெரியாமல் உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

சாமான்யன்Sep 11, 2024 - 10:05:45 PM | Posted IP 172.7*****

உண்மைக்கு புறம்பாக செய்தி வெளியிட்டமைக்கு ஏன் வழக்கு பதிவு செய்யக் கூடாது?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital




New Shape Tailors



Thoothukudi Business Directory