» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக பெருமாள்சாமி கதிர்வேல் நியமனம்!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 12:36:02 PM (IST)
தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக பெருமாள்சாமி கதிர்வேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினரான கே.பெருமாள்சாமி, தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஎன்டியூசி தொழிற்சங்கங்கள் மற்றும் அதன் உறுப்பினர்களின் நலன் கருதி தமிழ்நாடு ஐஎன்டியூசி கிளைக்கு நிர்வாக குழுவை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் காந்தி தலைமையில், இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் அகில இந்திய தலைவர் சஞ்சீவி ரெட்டி ஒப்புதல்படி தமிழ்நாடு ஐஎன்டியூசி தலைவர் ஜெகநாதன் வழிக்காட்டுதல்கள் படி நியமிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழ்நாடு ஐஎன்டியூசி பொதுச் செயலாளராக பெருமாள்சாமி கதிர்வேல் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
BalajiSep 10, 2024 - 06:19:06 PM | Posted IP 172.7*****