» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் பெண் பலி: கணவர் படுகாயம்!
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 12:27:18 PM (IST)
வேம்பாரில் சாலையின் குறுக்கே மாடு வந்ததால் நிகழ்ந்த பைக் விபத்தில் பெண் உயிரிழந்தார். அவரது கணவர் படுகாயம் அடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், கன்னிராஜபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி விஜயலட்சுமி (55). இந்த தம்பதியர் தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து விட்டு பைக்கில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். தூத்துக்குடி - சாயல்குடி கிழக்கு கடற்கரை சாலை, வேம்பார் அருகே செல்லும்போது குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.
இதில் கணவன் - மனைவி இருவரும் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் இருவரும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் விஜயலட்சுமி பரிதாபமாக இறந்தார். அவரது கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சூரங்குடி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.