» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகர ரயில் பயணிகளுக்கு பயணிகள் நலச்சங்கம் வேண்டுகோள்!

செவ்வாய் 10, செப்டம்பர் 2024 11:18:13 AM (IST)

தூத்துக்குடி- திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் ஏறி, மணியாச்சி சந்திப்பில் இறங்கினால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மாறிக் கொள்ளலாம் என்று பயணிகள் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலசங்கம் வெளியிட்ட அறிக்கையில், "வண்டி எண். 06667 தூத்துக்குடியில் இருந்து மாலை 06:25 மணிக்கு இரவு 8:25 மணிக்கு திருநெல்வேலி சந்திப்பு சென்றடையும். தூத்துக்குடி திருநெல்வேலி பயணிகள் ரயில் கட்டணம் ரூ. 20-00.

தூத்துக்குடியில் இருந்து மாலை 6:25 மணிக்கு புறப்படும் தூத்துக்குடி- திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் ஏறி, வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இறங்கினால் வண்டி எண். 16127 சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்தவர்கள் மாறிக் கொள்ளலாம்.

அதேபோல், வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்கு இரவு 08-09 மணிக்கு வரும் வண்டி எண். 16845 ஈரோடு-செங்கோட்டை விரைவு ரயிலில் ஏறினால் திருநெல்வேலி (இரவு 08-50 மணி) சேரன்மகாதேவி (இரவு 09-12 மணி) கல்லிடைக்குறிச்சி (இரவு 09-22 மணி) அம்பாசமுத்திரம் (இரவு 09-27 மணி) கீழக்கடையும் (இரவு 09-42 மணி) பாவூர்சத்திரம் (இரவு 09-56 மணி)

தென்காசி (இரவு 10-10 மணி) செங்கோட்டை (இரவு 11.10 மணி) செல்லும் பயணிகள் தூத்துக்குடியில் இருந்து மேற்காணும் நகரங்களுக்கு நேரடி பயண சீட்டு பெற்றுக் கொண்டு பயணம் செய்து கொள்ளலாம்.

அதேபோல் வண்டி எண். 16846 செங்கோட்டையில் இருந்து ஈரோடு செல்லும் ரயிலில் காலை 05-00 மணிக்கு செங்கோட்டையில் இருந்து ஏறினால் தென்காசி காலை (காலை05- 13 மணி) பாவூர்சத்திரம் (காலை மணி) 

கீழக்கடையம் (காலை 05-40 மணி) அம்பாசமுத்திரம்(காலை 05-51 மணி) கல்லிடைக்குறிச்சி (காலை 05-58 மணி) சேரன்மகாதேவி (காலை 06-05 மணி) திருநெல்வேலி (காலை 6:25 மணி வந்து, வாஞ்சி மணியாச்சி சந்திப்பிற்கு 06-55 மணிக்கு வந்து சேரும். அதன் பின் வண்டி எண். 06668 திருநெல்வேலி- தூத்துக்குடி ரயில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் 08-20 மணிக்கு புறப்படும். அந்த தூத்துக்குடி ரயிலில் ஏறி தூத்துக்குடி மேலூருக்கு காலை 08-54 வந்து விடலாம். தூத்துக்குடிக்கு 9:20 க்கு வந்து சேரும். 

ஆனால் தூத்துக்குடி மாநகர பயணிகள் மாலையில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கடையம், தென்காசி, செங்கோட்டை செல்ல இந்த தூத்துக்குடி -திருநெல்வேலி தூத்துக்குடி -திருநெல்வேலி ரயில்களை வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இணைப்பு ரயில்களாக பயன்படுத்தலாம். 

மேற்காணும் நகரங்களுக்கு செல்ல தூத்துக்குடியில் இருந்து நேரடி பயணச்சீட்டும் பெற்றுக் கொள்ளலாம்.

தூத்துக்குடி- சேரன்மகாதேவி பயண கட்டணம் ரூபாய் 45

தூத்துக்குடி- கல்லிடைக்குறிச்சி பயண கட்டணம் ரூ. 50 

தூத்துக்குடி- அம்பாசமுத்திரம் பயண கட்டணம் ரூ. 50

தூத்துக்குடி-கீழக்கடையம் பயண கட்டணம் ரூ. 55 

தூத்துக்குடி-பாவூர்சத்திரம் பயண கட்டணம் ரூ. 60 

தூத்துக்குடி-தென்காசி பயண கட்டணம் ரூ. 60 

தூத்துக்குடி- செங்கோட்டை பயண கட்டணம் ரூ. 65 

தூத்துக்குடியில் இருந்து மாலை 6:15 க்கு தென்காசி செங்கோட்டை செல்ல வேண்டுமென்றால் கிட்டத்தட்ட 4 மணி நேரம் பயண நேரம் ஆகும். ஆனால்,இந்த தூத்துக்குடி- திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலில் வாஞ்சி மணியாச்சி சந்திப்பில் இறங்கி ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயிலில் மாறிச் சென்றால் கிட்டத்தட்ட 3 1/2 மணி நேரத்திற்குள்ளாக தென்காசிக்கு செல்லலாம்.

தூத்துக்குடியில் இருந்து அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் செல்பவர்கள் அம்பாசமுத்திரத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்லலாம். குறிப்பு: திருநெல்வேலி- தூத்துக்குடி, திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயில் ஞாயிறு மட்டும் இயங்காது என்பதையும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்). இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

GANESHSep 11, 2024 - 05:47:49 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு ரயில் பாதை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை வைக்க வேண்டும்

GaneshSep 11, 2024 - 05:46:28 PM | Posted IP 162.1*****

தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு நேர் வழியில் ரயில் பாதை அமைக்க நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும்

perumalSep 10, 2024 - 01:45:20 PM | Posted IP 162.1*****

முன்பு காலையில் 8 45க்கு புறப்பட்டு கொண்டிருந்த திருச்செந்தூர் பாசஞ்சர் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதில் திருநெல்வேலி வரை வந்து அங்கிருந்து வள்ளியூர்,நாகர்கோவில், திருவனந்தபுரம் செல்பவர்கள் பயணிக்க ஏதுவாக இருந்தது.அதையும் முயற்சி செய்யலாம்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





New Shape Tailors


Arputham Hospital



Thoothukudi Business Directory