» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் 18 தாசில்தார்கள் இடமாற்றம் : ஆட்சியர் உத்தரவு
செவ்வாய் 10, செப்டம்பர் 2024 8:25:28 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வரும் 18 தாசில்தார்களை நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டு உள்ளார்.

கயத்தார் தாசில்தார் தங்கையா, கோட்ட கலால் அலுவலராகவும், கோட்டகலால் அலுவலர் ரகுபதி, சிப்காட் வெம்பூர் நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும், டாஸ்மாக் குடோன் மேலாளர் கண்ணன், வெம்பூர் சிப்காட் அலகு 1 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், அரசு கேபிள் டிவி தாசில்தார் செல்வபிரசாத், டாஸ்மாக் குடோன் மேலாளராகவும், தூத்துக்குடி சமூகபாதுகாப்பு திட்ட தனிதாசில்தார் ராஜலட்சுமி, அரசு கேபிள் டிவி தாசில்தாராகவும்,
ஏரல் தாசில்தார் பேச்சிமுத்து, ஆதியாகுறிச்சி விண்வெளி தொழிற்பூங்கா அலகு-1 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், திருச்செந்தூர் இஸ்ரோ நில எடுப்பு அலகு-6 தாசில்தார் பிரபாகரன், வெம்பூர் சிப்காட் அலகு-3 தனிதாசில்தாராகவும், நெடுஞ்சாலைப் பணிகள் நிலம் எடுப்பு தாசில்தார் சுடலை மணி, வெம்பூர் சிப்காட் அலகு 5 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், டாஸ்மாக் கலால் மேற்பார்வை அலுவலர் சாமிநாதன், திருச்செந்தூர் இஸ்ரோ அலகு-5 நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும்,
டாஸ்மாக் உதவி மேலாளர் செல்வகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு பறக்கும் படை தனிதாசில்தாராகவும், தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் நிலம் எடுப்பு தாசில்தார் சுரேஷ், வெம்பூர் சிப்காட் அலகு 7 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், அல்லிகுளம் சிப்காட் அலகு 4 நிலம் எடுப்பு தாசில்தார் லட்சுமி கணேஷ், விளாத்திகுளம் அகல ரயில் பாதை அலகு 1 நிலம் எடுப்பு தாசில்தாராகவும், விளாத்திகுளம் அகல ரயில் பாதை அலகு 1 நிலம் எடுப்பு தாசில்தார் சேதுராமன்,
வெம்பூர் சிப்காட் அலகு 8 நிலம் எடுப்பு தனிதாசில்தாராகவும், விளாத்திகுளம் அகல ரயில் பாதை அலகு 2 நிலம் எடுப்பு தனிதாசில்தார் வித்யா, வெம்பூர் சிப்காட் அலகு 9 நிலம் எடுப்பு தனி தாசில்தாராகவும், விளாத்திகுளம் அகல ரெயில் பாதை அலகு 3 நிலம் எடுப்பு தாசில்தார் நாகராஜன், வெம்பூர் சிப்காட் அலகு 10 நிலம் எடுப்பு தாசில்தாராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். இதே போன்று துணை தாசில்தார்களாக பணியாற்றி வரும் 20 பேர் தாசில்தாராக பதவி உயர்வு அளித்து மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உத்தரவிட்டு உள்ளார்.
மக்கள் கருத்து
SUNDARAM RADHAKRISHNSep 11, 2024 - 01:47:45 PM | Posted IP 172.7*****
நான் ஒரு சமூக சேவகர் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா 👍
மேலும் தொடரும் செய்திகள்

பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!
சனி 19, ஏப்ரல் 2025 11:15:44 AM (IST)

தூய மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் சிலுவை பாதை வழிபாடு
சனி 19, ஏப்ரல் 2025 10:45:40 AM (IST)

தூத்துக்குடியில் மீன்களில் விலை கடும் உயர்வு: மீன்வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்!
சனி 19, ஏப்ரல் 2025 10:17:55 AM (IST)

அம்மிக் குழவியால் தாக்கி வாலிபர் கொடூரகொலை : மாமனார் உட்பட 2பேர் கைது!
சனி 19, ஏப்ரல் 2025 10:07:16 AM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்
சனி 19, ஏப்ரல் 2025 8:55:53 AM (IST)

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

SUNDARAM RADHAKRISHNApr 28, 1726 - 02:30:00 AM | Posted IP 172.7*****