» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் நீதிமன்ற ஊழியர் பலி; நண்பர் படுகாயம்!
திங்கள் 9, செப்டம்பர் 2024 10:29:20 AM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் நீதிமன்ற ஊழியர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நெல்லையப்பன் (25), இவர் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வருகிறார். இவரது நண்பர் தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்த நடராஜன் மகன் வெள்ளைச்சாமி (35) இவர்கள் 2 பேரும் நேற்று செக்காரக்குடியில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை நெல்லையப்பன் ஓட்டினார்.
தூத்துக்குடி மறவன் மடம் அருகே வந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது கீழே விழுந்த நெல்லையப்பன், அவ்வழியே வந்த அரசு பஸ்ஸின் பின்பக்க டயரில் சிக்கி பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வெள்ளைச்சாமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.