» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நிலத்திற்கு வைத்த தீயில் தடுமாறி விழுந்த விவசாயி பலி: கோவில்பட்டி அருகே பரிதாபம்!

திங்கள் 9, செப்டம்பர் 2024 8:27:04 AM (IST)

கோவில்பட்டி அருகே நிலத்தை உழவுப்பணிக்கு தயார் செய்வதற்கு செடிகொடிகளை வெட்டி தீவைத்த விவசாயி, தடுமாறி தீயில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே தீத்தாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான் (70). விவசாயி. இவர் ஊரில் உள்ள விவசாயம் செய்வதற்காக ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார். அந்த நிலத்தில் புரட்டாசி விதைப்பு பணிக்காக உழவு பணிகள் மேற்கொள்ள தயார் செய்து வந்தார். முன்னதாக நிலத்தில் உள்ள செடி, கொடிகளை வெட்டி தீவைத்து எரித்துள்ளார். 

அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பக்கத்தில் உள்ள நிலங்களுக்கும் தீ பரவி உள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக தீ பரவுவதை தடுக்க முயன்றுள்ளார். காற்றின் வேகம் அதிகரித்து கொண்டே இருந்ததால், தீ மளமளவென எரிந்துள்ளது. இதனால் தீயின் வெப்பமும் அதிகமாக இருந்தது. ஆனாலும் பக்கத்து நிலங்களுத்து தீ பரவாமல் தடுக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி நிலத்தில் எரிந்து கொண்டிருந்த தீயில் விழுந்துள்ளார். 

இதில் அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீண்டநேரத்திற்கு பிறகு அப்பகுதிக்கு சென்ற சக விவசாயகள் கொடுத்த தகவலின் பேரில் கொப்பம்பட்டி போலீசார் சம்பவ நிலத்துக்கு சென்று, நிறைகுளத்தான் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து

SamuelSep 9, 2024 - 10:58:02 AM | Posted IP 172.7*****

எதுக்கு வழக்கு போடணும் கொன்ற வேண்டியதுதானே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors

Arputham Hospital






Thoothukudi Business Directory