» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பழக்கடையில் திருட்டு: காவல் நிலையத்தில் வியாபாரிகள் புகார்!
திங்கள் 10, ஜூன் 2024 11:10:36 AM (IST)
தூத்துக்குடியில் பழக்கடையை சூறையாடி, பணத்தை திருடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கத்தினர் காவல் நிலையத்தில் மனு அளித்தனர்.
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் கேஎஸ் புரூட்ஸ் & ஜூஸ் பார்க் என்ற பழக்கடை நடத்தி வருகிறார். கடந்த 8ஆம் தேதி பழக்கடையில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் சூறையாடி, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.4ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் இணைச்செயலாளர் தெர்மல் சொ.ராஜா சிப்காட் காவல் நிலையத்தில் மனு அளித்தார். இதில் மீளவிட்டான் மெயின் ரோடு வியாபாரிகள் நல சங்க பொது செயலாளர் பா.காளிதுரை, புது பஸ் ஸ்டாண்ட் சங்க செயலாளர் தளபதி செபஸ்தியான், அண்ணா பேருந்து நிலைய சங்க பொருளாளர் விக்னேஷ், சங்க பொருளாளர் ஏனோஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.