» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வாக்குஎண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள அலுவலர்களுடன் ஆட்சியர் ஆலோசனை!
புதன் 29, மே 2024 5:11:20 PM (IST)
கன்னியாகுமரி வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், ஆலோசனை மேற்கொண்டார்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிறு கூட்டரங்கில் இன்று (29.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரிய உள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் கடந்த 19.04.2024 அன்று நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வரும் 04.06.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பணிபுரியவுள்ள உதவி தேர்தல் அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் வழிகாட்டி நெறிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இக்கூட்டத்தில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அலுவலர் சங்கரலிங்கம், உதவி தேர்தல் அலுவலர்கள் செ.தமிழரசி, சுப்பையா, கனகராஜ், சுப்புலெட்சுமி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள் செந்தில்வேல் முருகன், லொரைட்டா, சாந்தி, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்), வட்டாட்சியர்கள் கோலப்பன் (தோவாளை), புரந்தரதாஸ் (திருவட்டார்), முருகன்(கல்குளம்), ராஜசேகர் (கிள்ளியூர்), குமாரவேல் (விளவங்கோடு), தனி வட்டாட்சியர் (தேர்தல்) வினோத், உதவி தேர்தல் வட்டாட்சியர் மணிகண்டன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள்.