» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் தகவல்!
புதன் 29, மே 2024 3:33:35 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர் சான்று பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கு கல்வி நிலையங்களில் விண்ணப்பித்து பயன்பெற சார்ந்தோர் சான்று முன்னாள் படைவீரர் அலுவலகத்தை நேரில் அணுகி பெறலாம்.
மேலும் முன்னாள் படைவீரர் நலத்துறை இணையதள முகவரியில் exwel.tn.gov.in விண்ணப்பித்தும் சான்று பெற்றிடலாம். நடப்பு கல்வி ஆண்டிற்கு இதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட சான்றோர் சான்றிதழினை பயன்படுத்தக் கூடாது.
கல்வி கடன் வட்டி மானியம் (BLISS), மத்திய அரசு (KSB & PMSS) மற்றும் மாநில அரசால் (ECLIG) வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பெறுவது தொடர்பான விளக்க கையேடு பெற்றுக்கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நலன், உதவி இயக்குநரை நேரில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.