» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டெங்கு தடுப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
புதன் 29, மே 2024 3:19:20 PM (IST)
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் டெங்கு தடுப்பு பணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் டெங்கு தடுப்பு பணி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு பணி முன்னேற்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜவகர் தலைமை வகித்தார்.
வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கருணாநிதி, மருத்துவமில்லா சுகாதார மேற்பார்வையாளர் செல்லையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் உமா செல்வி கலந்து கொண்டு டெங்கு தடுப்பு பணிகள் குறித்து பேசினார். இதில் சுகாதார ஆய்வாளர்கள், துப்புரவு ஆய்வாளர்கள்,ஊராட்சி செயலர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.