» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் லாரி கிளீனா் திடீர் மரணம் - போலீஸ் விசாரணை
புதன் 29, மே 2024 11:03:03 AM (IST)
தூத்துக்குடியில் உள்ள தனியாா் நிலக்கரி நிறுவனத்தில் கேரளத்தைச் சோ்ந்த லாரி கிளீனா் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
கேரள மாநிலம், கொல்லம் முத்துப்பிள்ளைக்காட்டைச் சோ்ந்த தங்கப்பன் மகன் மஜூ (44). இவா் கேரளத்தில் இருந்து தூத்துக்குடி இ.பி. காலனியில் உள்ள ஒரு தனியாா் நிலக்கரி நிறுவனத்திற்கு நிலக்கரி ஏற்றிவந்த லாரியில் கிளீனராக வந்திருந்தாராம்.
அப்போது அங்கு அவா் நேற்று மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) ராமலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Rajaமே 30, 2024 - 04:03:51 PM | Posted IP 162.1*****