» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய சட்டங்கள் குறித்து காவல் ஆய்வாளர்களுக்கு பயிற்சி!
சனி 25, மே 2024 5:35:04 PM (IST)

தூத்துக்குடியில் பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட 3 புதிய முக்கிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல் ஆய்வாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது.
தற்போதுள்ள குற்றவியல் சட்டங்களான இந்திய தண்டனை சட்டம் (IPC), இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் (CRPC) மற்றும் இந்திய சாட்சிய சட்டங்கள் (IEA) ஆகியவற்றை ரத்து செய்வதற்கு பாராளுமன்றத்தால் 'பாரதிய நியாய சன்ஹிதா" (Bharatiya Nyaya Sankhita - BNS), 2023 'பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா" (Bharatiya Nagarik Suraksha Sanhita - BNSS) 2023 மற்றும் 'பாரதிய சாக்ஷிய அதினியம்" (Bharatya Sakshya Adhiniyam - BSA) 2023 ஆகியவை 25.12.2023 அன்று இயற்றப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டங்கள் 01.07.2024 முதல் அமலுக்கு வருவதையடுத்து இச்சட்டங்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (25.05.2024) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சி வகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
இப்பயிற்சியில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசு தரப்பு வழக்கறிஞர் சிவக்குமார் கலந்து கொண்டு காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளித்தார். இந்த பயிற்சி வகுப்பில் தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம், காவல் துணை கண்காணிப்பாளர்கள் மணியாச்சி லோகேஸ்வரன், ஸ்ரீவைகுண்டம் மாயவன், மாவட்ட குற்றப்பிரிவு ராஜு உட்பட அனைத்து உட்கோட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாடியில் இருந்து தவறிவிழுந்த வடை மாஸ்டர் சாவு
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:35:51 AM (IST)

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என்று சொல்ல மத்திய அரசுக்கு உரிமை கிடையாது : கனிமொழி எம்பி பேட்டி
திங்கள் 17, பிப்ரவரி 2025 10:21:14 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:27:05 AM (IST)

விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

வேலையில்லாத விரக்தியில் பூசாரி தற்கொலை!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:17:33 AM (IST)

திருச்செந்தூா் தொகுதியில் கனிமொழி எம்.பி., மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:11:22 AM (IST)
