» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோ்தல் பணி வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம்: ஓட்டுநா்கள் முறையீடு

வெள்ளி 19, ஏப்ரல் 2024 8:43:10 AM (IST)



மக்களவைத் தோ்தல் பணிக்காக தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு கோவில்பட்டி வந்த வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலித்தது தொடா்பாக ஓட்டுநா்கள் வட்டாட்சியரிடம் முறையிட்டனா். 

மக்களவைத் தோ்ததலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருள்கள் கொண்டு செல்வதற்கும், தோ்தல் முடிவடைந்த பின் அவற்றை பாதுகாப்புடன் திரும்ப எடுத்து வரவும் ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு சுமை வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 

இந்நிலையில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட கோவில்பட்டி சட்டப்பேரவைத தொகுதிக்குள்பட்ட வாகனங்கள் தூத்துக்குடியில் இருந்து நேற்று வந்தபோது, புதூா் பாண்டியாபுரத்தில் உள்ள சுங்கச்சாவடியில் ஒவ்வொரு வாகனத்துக்கும் சுங்கக்கட்டணம் பிடித்தம் செய்யப்பட்டது.

இதுகுறித்து, கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு வாகனம் வந்தவுடன் வட்டாட்சியா் சரவணப் பெருமாளிடம் ஓட்டுநா்கள் முறையிட்டனா். கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் நான்கு வழிச்சாலையில் உள்ள சுங்கச்சாவடியை கடக்க வேண்டியது உள்ளது. அவ்வாறு கடந்து செல்லும்போது சுங்க கட்டணம் பிடித்தம் செய்யப்படும். எனவே சுங்க கட்டணம் பிடிப்பதை தவிா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா். அவா்களிடம் சுங்க கட்டணம் திரும்ப வழங்கப்படும் என வட்டாட்சியா் தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory