» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் துவங்கியது

வியாழன் 2, மே 2024 12:21:08 PM (IST)

தூத்துக்குடியில் 15 நாட்கள் நடைபெறும் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம்  இன்று துவங்கியது.

தூத்துக்குடியில் பிரேவ் வாரியர்ஸ் ஹாக்கி  கிளப் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் கோடைகால ஹாக்கி பயிற்சி முகாம் தருவை மைதானத்தில் இன்று தொடங்கியது. வரும் 15 ஆம் தேதி வரை முகாம் நடைபெறுகிறது.  பயிற்சி முகாம் துவக்க விழாவிற்கு வ.உ.சி., துறைமுக மற்றும் அகில இந்திய துறைமுக ஹாக்கி வீரர்கள் ஜான், கென்னடி மற்றும் கதிரவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபர்கள் அதிபன், வளர்மதி வரதன் ஆகியோர் கலந்து கொண்டு ஹாக்கி பயிற்சி முகாமை துவக்கி வைத்தனர். பயிற்சியாளர்கள் ரவி, சிவசூரியன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 122 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ஹாக்கி வீரர்கள் ஜோசப், சங்கர், ஆலிவர், கோவிந்தன், பாலு , மதன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிறப்பித்தார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory