» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி அருகே லாரி மோதி வாலிபர் பலி!
வியாழன் 18, ஏப்ரல் 2024 11:59:43 AM (IST)
தூத்துக்குடி அருகே சாலையில் நடந்து சென்றபோது, லாரி மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி அருகிலுள்ள முடிவைத்தானேந்தல் கிராமம் மேல தெருவைச் சேர்ந்தவர் கணேசன் மகன் சுதர்சன் (31). இவர் நேற்று வாகைகுளத்தில் இருந்து மீனாட்சிபட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரி இவர் மீது மோதியதில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனசுந்தர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த கீழ தட்ட பாறை கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் மல்லிகை நாதன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்