» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தோட்டத்தில் 1145 மதுபாட்டில்கள் பதுக்கல் : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு

ஞாயிறு 14, ஏப்ரல் 2024 8:09:45 PM (IST)

சாத்தான்குளம் அருகே தோட்டத்தில் பதுக்கிய 1,145 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - தச்சமொழி சாலையில் செல்வகுமார் என்பவரது தோட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏசுராஜசேகரன் தலைமையில் போலீசார் அந்த தோட்டத்துக்கு சென்று சோதனை நடத்தினர். 

அப்போது தோட்டத்தில் ஒரு இடத்தில் 18 மூட்டைகளில் 1,145 மது பாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் ஆகும். இதையடுத்து அந்த மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக செல்வகுமார், பார் ஊழியரான ரவிக்குமார் மகன் கிதியோன் என்ற ரூபன் ஆகிய 2 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital

CSC Computer Education









Thoothukudi Business Directory