» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

சனி 13, ஏப்ரல் 2024 8:16:36 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடி, வ.உ.சிதம்பரம் கல்லூரி மற்றும் புரோகிரேடு கரியர் சொல்யூஷன்ஸ் (Prograd Career Solutions Pvt. Ltd.) இணைந்து நடத்திய மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் வ.உ.சிதம்பரம் கல்லூரியில் இன்று (சனிக்கிழமை) நடைப்பெற்றது. இந்நிகழ்வை கல்லூரியின் முதல்வர் சொ.வீரபாகு தொடங்கி வைத்தார். Prograd Career Solutions Pvt. Ltd. இயக்குனர் சங்கர நாராயணன் வாழ்த்துரை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். 

இவ்வேலைவாய்ப்பு முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை நடைபெற்றது. இம்முகாமில் இதில் Axis Bank, HDFC Bank, Flipkart, TP Solar Pvt. Ltd., Royal Enfield Manufacturer, Appollo Tyres Pvt. Ltd. Jio Tele Communications உட்பட 35க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. இம்முகாமில் 1000-க்கும் மேற்பட்ட வ.உ.சிதம்பரம் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கு பெற்றனர், இதில் 796 மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பினைப் பெற்று பயனடைந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory