» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விளாத்திகுளத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா : அதிமுகவினர் மரியாதை!!

சனி 24, பிப்ரவரி 2024 3:14:52 PM (IST)விளாத்திகுளத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் முனிய சக்திராமச்சந்திரன், முன்னாள் எம்எல்ஏ என்.கே.பெருமாள் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

விளாத்திகுளம் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு அதிமுக கொடி ஏற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஜெ. பேரவை செயலாளர் என்.கே.வரதராஜ பெருமாள், அதிமுக நகர செயலாளர் மாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அதிமுக இலக்கிய அணி பேச்சாளர் இளங்கோ, வார்டு கவுன்சிலர் பிரியா, மகளிர் அணி சாந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory