» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சி.எம்., பள்ளியில் கலைஞாின் குறளோவியம் முப்பெரும் விழா
செவ்வாய் 13, பிப்ரவரி 2024 10:09:03 AM (IST)
தூத்துக்குடி சி.எம்., மேல்நிலைப்பள்ளியில் கலைஞாின் குறளோவியம் ஆய்வுரையின் முப்பெரும் விழா நடைபெற்றது.
தூத்துக்குடி சி.எம்., மேல்நிலைப்பள்ளியில் கலைஞா் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞாின் குறளோவியம் ஆய்வுரையின் முப்பெரும் விழா நடைபெற்றது. அறிவுச்செல்வம் தலைமை வகித்தார். தெய்வநாயகம், லெட்சுமணன், ஸ்ரீதர கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
உலகத்திருக்குறள் பேரவை தலைவா் தூத்துக்குடி தனராசு வரவேற்புரை ஆற்றினாா். உலக அமைப்பாளா் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் பெருங்கவிக்கோ சேதுராமன் குளளோவியம் உரையாற்றினாா். தூத்துக்குடி மாவட்ட செயலாளா் மோ.அன்பழகன், சங்கரேஸ்வாி உட்பட பலா் கலந்துகொண்டனா். நிர்வாகி இளமுருகு நன்றியுரையாற்றினாா்.