» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது!

திங்கள் 12, பிப்ரவரி 2024 11:56:56 AM (IST)

தூத்துக்குடியில் பைக்கில் வந்து ஆடு திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். 

தூத்துக்குடி மீளவிட்டான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலு மனைவி ராமலட்சுமி (44). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று சின்னக்கண்ணுபுரம் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது பைக்கில் வந்த 2பேர் ஒரு ஆட்டை திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்து ராமலட்சுமி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி ஆடுகளை திருடிய தாளமுத்துநகர் ராம்தாஸ் நகரைச் சேர்ந்த முத்து முகம்மது மகன் நாகூர்மீரான் (24), செட்டிகுமார் மகன் சரவணகுமார் (19) ஆகிய 2பேரை கைது செய்தனர். இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 


மக்கள் கருத்து

G.MuthukrishnanFeb 12, 2024 - 02:59:16 PM | Posted IP 172.7*****

Railway station city ku outdoors poganum tuticorin ku ethukku 5 gate

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsArputham Hospital
Thoothukudi Business Directory