» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை : தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழன் 21, டிசம்பர் 2023 7:46:29 PM (IST)

தூத்துக்குடியில் நாளை முதல் ரயில் சேவை மீண்டும் துவங்குகிறது. முத்துநகர் எக்ஸ்பிரஸ் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17, 18-ந் தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் வரலாறு காணாத வகையில் அதி கனமழை பெய்தது. இடைவிடாமல் கொட்டித்தீர்த்த மழையால் தூத்துக்குடி நகரமே வெள்ளத்தில் மூழ்கியது. மழை நின்றும் தூத்துக்குடி மாநகரில் மழைநீர் வடியாமல் தொடர்ந்து மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். 

தொடர் மழையால் தூத்துக்குடியில் பஸ் மற்றும் ரயில் சேவை நிறுத்தப்பட்டன.  இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி ரயில் நிலைய சீரமைப்பு பணி நிறைவடைந்துள்ளதால் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில், "ரயில் எண் 12693 சென்னை எழும்பூர் - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரயில் 21.12.2023 அன்று வழக்கமான அட்டவணையில் தூத்துக்குடி வரை இயக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட மதுரை மற்றும் தூத்துக்குடி இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்படுகிறது.

ரயில் எண். 12694 தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர்  எக்ஸ்பிரஸ் 22.12.2023 அன்று தூத்துக்குடியில் இருந்து அதன் வழக்கமான அட்டவணையில் இயக்கப்படும். முன்னர் அறிவிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் மதுரை இடையே பகுதி ரத்து ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருச்செந்தூர் ரயில் வழித்தடத்தில் தண்டவாளத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் இன்னும் ஒரு வாரத்தில் திருச்செந்தூரில் ரயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Arputham Hospital
Thoothukudi Business Directory