» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழகத்தில் 4,272 அடுக்குமாடி குடியிருப்புகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

திங்கள் 20, நவம்பர் 2023 5:18:16 PM (IST)


தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 4,272 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கூட்டுறவுத்துறை சார்பில் 23.35 கோடி ரூபாய் செலவில் திருச்செங்கோடு, ஈரோடு, ராசிபுரம், பெருந்துறை ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், தானியங்கி வகைப்படுத்தும் மற்றும் தரப்படுத்தும் இயந்திரங்களுடன் கூடிய ஏலகளங்கள் மற்றும் ஆய்வுக்கூடம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் தென்மேல்பாக்கம் நகர கூட்டுறவுக் கடன் சங்கங்களில் கட்டப்பட்டுள்ள புதிய சங்கக் கட்டடம் மற்றும் திருமண மண்டபம் ஆகியவற்றை இன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.453.67 கோடி செலவில் 9 மாவட்டங்களில் 13 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டு உள்ள 4272 அடுக்கு மாடி குடியிருப்புகளையும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும், பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4680 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.98.28 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டு வதற்கான பணி ஆணை களையும், 72 கைத்தறி நெசவாளர்களுக்கு பயனாளி கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ. 4 லட்சம் வீதம் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான பணி ஆணைகளையும் முத்தமி ழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 100 மாற்றுத்திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்.எல்.சி.) நிறுவனத்திற்காக நிலஎடுப்பு செய்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட மாற்று இடங்களுக்கு நிலவரித்திட்டப் பணி மேற்கொண்டு அம்மக்களின் 60 ஆண்டு கால கோரிக் கைக்கு தீர்வு காணப்பட்டு 3543 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக, 7 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

மேலும், 14 கோடியே 86 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப் பட்டுள்ள திருவட்டார், கிள்ளியூர் மற்றும் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் தேனியில் கூட்ட ரங்கக் கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்து, இணையவழிச் சேவையின் மூலமாக நிலஅளவைக்கு விண்ணப்பிக்கும் புதிய வசதியையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் அமைச்சர் கள் கே.ஆர்.பெரியக் கருப் பன், ஆர்.காந்தி, தா.மோ.அன்பரசன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்தி ரன், சி.வி.கணேசன், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital











Thoothukudi Business Directory