» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கொலை, கஞ்சா வழக்குகளில் கைதான 7 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!

ஞாயிறு 17, செப்டம்பர் 2023 6:44:07 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா வழக்குகளில் சம்மந்தப்பட்ட 7பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 

கடந்த 16.08.2023 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியைச் சேர்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் சக்திவேல் (52) என்பவரை முன்விரோதம் காரணமாக அரிவாள் மற்றும் நாட்டு வெடிகுண்டால் தாக்கி கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி பழையகாயல், தேவர் காலனியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லெட்சுமணன் (27), சாத்தான்குளம் வீரஇடைகுடி பகுதியை சேர்ந்த வேல்பாண்டி மகன் செல்லப்பா (23), விளாத்திகுளம் சூரங்குடி சி.ஆர் காலனியை சேர்ந்த பரமசிவம் மகன் கணேசமூர்த்தி (23) மற்றும் சாத்தான்குளம் முதலூர் ரோடு பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் மகன் ஆண்டோ வின்ஸ்டன் (20) ஆகியோரை சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். 

கடந்த 22.08.2023 அன்று கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கயத்தாறு ராஜாப்புதுக்குடி பகுதியில் விற்பனைக்காக கண்டெய்னர் லாரியில் கஞ்சாவை கடத்தி வந்த வழக்கில் தூத்துக்குடி ஸ்டேட்பாங்க் காலனியை சேர்ந்த சேகர் மகன் விஜயகுமார் (36), தூத்துக்குடி ஆரோக்கியபுரம் கோவில்பிள்ளைவிளை பகுதியை சேர்ந்த பாலசந்திரன் மகன் ஜான் அற்புத பாரத் (33) மற்றும் ஆந்திரமாநிலம், விஜயவாடா, கணேஷ்நகரை சேர்ந்த சீக்கட்லா வெங்கடராவ் மகன் சீக்கட்லா சட்டிபாபு (39) ஆகியோரை கோவில்பட்டி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் நிலைய போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 600 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். 

இவ்வழக்குகளில் கைதா லெட்சுமணன், செல்லப்பா, கணேசமூர்த்தி, ஆண்டோ வின்ஸ்டன், விஜயகுமார், ஜான் அற்புத பாரத் மற்றும்  சீக்கட்லா சட்டிபாபு ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் மாவட்ட ஆட்சியருக்கு பரந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் கே. செந்தில்ராஜ் உத்தரவின் பேரில், சம்மந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும் அடைத்தனர்.

இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 எதிரிகள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 12பேர் உட்பட 123 எதிரிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Thoothukudi Business Directory